tamilnadu

img

15 வயது சிறுவன் மீது பாஜக-வினர் தாக்குதல்

அலகாபாத்:

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கறுப்புக் கொடி காட்டிய 15 வயதுச் சிறுவன் மீது பாஜகவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் ‘விஜய் சங்கல்ப்’ என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். மோடியின் வருகையையொட்டி, அலகாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, மோடி கூட்டத்திற்கு, கறுப்புக் கொடியுடன் வந்த அங்கித் பிரதான் யாதவ் என்ற 15 வயதுச் சிறுவன், மோடி பேசத் துவங்கியதும், தனது நாற்காலியின் மீது ஏறி, கறுப்புக் கொடியைக் காட்டியுள்ளான். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பியுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக-வினர், அந்தச் சிறுவனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பாதுகாப்புப்படையினர் தடுத்தும் விடாமல் வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோதும், அச்சிறுவன், கடைசிவரை மோடிக்கு எதிரான முழக்கத்தை நிறுத்தவில்லை என்பதுதான்.


தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சிறுவன் அங்கித் பிரதான், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மட்டுமே பொதுக்கூட்டத்திற்கு சென்றதாகவும், ஆனால், பாஜக-வினர் தன்னை தாக்கி விட்டதாகவும் கூறியுள்ளான்.


;